அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹு ஜல்ல ஜலாலஹுத்தாலாவின் பேரருளாலும், உயிரினும் மேலாகிய கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பெருங்கருணையாலும் , கிடைத்தற்கரிய பெரும் பாக்கியமாம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குலக்கொழுந்தாம் ஷெய்கு காமில், ஷெய்குத்தரீகத்,ஆஷிகே ரசூல் செய்யிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி அவர்களின் அருட்பிச்சையினாலும், முர்ஷித்னா அவர்களை வஸீலாவாக வைத்து அகிலமெலாம் ஒளிவீசும் சூரியனின் வருகைக்கு கட்டியம் கூறுவதைப் போல்,மன்னாதி மன்னரெல்லாம் பெரும் பொற்குவியலுடன் யூசுப் நபியவர்களை ஏலத்தில் எடுக்க காத்திருக்க தள்ளாத கிழவி ஒரு நூல்கண்டை கொண்டு ஏலம் கேட்டதுபோல், பெரும் மலையை இடம்பெயர வைக்க முயற்ச்சிக்கும் சிற்றெரும்பை விடவும் எளியவனின் இத்தளிர் முயற்ச்சியை அல்லாஹ் கபூல் செய்து, அகிலத்தாரெல்லாம் அல்லாஹ்வை நினைந்து வாழ, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காட்டித்தந்த வழியில் வாழ்ந்து வழிகாட்டும் முர்ஷித்னா அவர்களின் கரம்பற்றி ஈருலக ஈடேற்றம் பெற்று வாழ நம்மனைவரையும் அல்லாஹ் அருள் புரிய இறைஞ்சியவண்ணம் ஆரம்பம் செய்கிறேன்.
இதில் காணும் குறைகள் அனைத்தும் இந்த எளியவனையே சாரும், நிறைகள் அனைத்தும் சங்கைமிக்க எங்கள் ஆன்மீக குருநாதர் செய்யிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி அவர்களுக்கே சாரும். அல்ஹம்துலில்லாஹ்.